2018

காட்டுப் பஞ்சுருட்டானின் காட்சி கிடைத்த தருணம்

கார்த்திக். வி. எஸ், இயந்திரப் பொறியாளர், பறவை ஆர்வலர் & ஒளிப்படக் கலைஞர், சேலம்.

ஏற்காட்டில் கடந்த ஆறு மாதங்களாக அல்ல, ஒரு வருடத்திற்கும் மேலாகவே என் தேடலை மேற்கொண்டிருந்தேன். ஆனால் என் கண்ணில் மட்டும் படவே இல்லை. நான் தேடிக்கொண்டிருந்த காட்டுப் பஞ்சுருட்டான் (Blue-bearded Bee-eater) இங்கு தான் உள்ளதென்று கூறுகிறார்கள். ஏற்காடு அடிவாரம் தொடங்கி, கொட்டச்சேடு, குப்பனூர் வரை தனியாக பல முறை சென்று தேடி விட்டேன். ஆனால் கிடைக்கவே இல்லை. ஒரு கட்டத்தில் சரி இனிமேல் வரும்போது வரட்டும் என்ற விரக்தியில் விட்டுவிட்டேன். ஆனால் ஒவ்வொரு முறை இதைத் தேடும் போதும் சில புதிய பறவைகள் கிடைக்கும்.

விருந்தினரைச் சந்தித்தோம்

மேட்டூர் பகுதிக்கு ஐரோப்பியப் பஞ்சுருட்டான் (European Bee-eater) வந்துள்ளது என்ற செய்தி அறிந்து அங்கு செல்லலாம் என்று திட்டமிட்டேன். இதை என் நண்பர் ஒருவரிடம் தெரிவித்த போது அவரும் என்னோடு வருவதாகச் சொன்னார். உங்களுடன் சும்மா சுற்றுகிறேன். நீங்கள் என்ன செய்கிறீர்கள் எப்படிச் செய்கிறீர்கள் என்று பார்க்கத்தான் வருகிறேன். பறவைகளுக்காக அல்ல என்று கூறினார். நான் செய்வதைப் பார்த்து… என்ன சொல்வது அவருக்கும் இந்தப் பறவைப் பார்த்தல் நோய் தொற்றிக்கொண்டது. தற்போது வேலூரில் அவர் வீட்டருகே பறவைகளை இரசித்து மகிழத் தொடங்கிவிட்டார். இன்னும் நிறைய பறவைகளைக் காண வேண்டும் என்ற எண்ணம் அவருள் பதிந்துவிட்டது.

EUBE_Karthick_VS
ஐரோப்பியப் பஞ்சுருட்டான். European Bee-eater photographed by Karthick VS

வெளிநாட்டில் இருந்து வலசை வரும் ஐரோப்பியப் பஞ்சுருட்டான் மேட்டூரில் எங்கு இருக்கும் என்பதை eBird India வழியாக பார்த்துவிட்டுச் சென்றோம். குறிப்பிட்ட இடத்தை அறிய யாரையும் தொடர்பு கொள்ளவில்லை. அணையை ஒட்டித் தேடினால் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. ஏனெனில் பஞ்சுருட்டான்கள் பறக்கும் விதத்தையும் அதனுடைய சில பண்புகளையும் தெரிந்து வைத்திருந்தேன். உயரத்தில் இருந்த சில மின்கம்பிகளின் அருகே பறந்து கொண்டிருந்தன. அருகில் சென்று பார்த்தபோது அவை ஐரோப்பியப் பஞ்சுருட்டான்கள் என்பது உறுதியானது. மேலும் அருகில் சென்று காண்பதற்கு சில இடங்களில் தேடினோம். அப்போது பன்னிரண்டு பறவைகள் வரை தென்பட்டன.

(அன்று ஐரோப்பியப் பஞ்சுருட்டானோடு சேர்த்து மேலும் பல பறவைகளைக் கண்டோம். அப்பட்டியலைக் காண இங்கே சொடுக்கவும்.)

காட்டுப் பஞ்சுருட்டானின் அற்புதக் காட்சி

நான் ஏற்காடு முழுவதும் காட்டுப் பஞ்சுருட்டானைத் தேடினேன். ஆனால் எனக்கு சீக்கிரமாக கிடைத்ததோ ஐரோப்பியப் பஞ்சுருட்டான். அதன் பிறகு எவ்வித எதிர்ப்பார்ப்பும் இன்றி மீண்டும் ஏற்காட்டிற்கு பயணத்தைத் துவங்கினேன்.

ஐரோப்பியப் பஞ்சுருட்டானைப் பார்த்த அடுத்த இரண்டாவது வாரம், நான் சற்றும் எதிர்ப்பாராத நேரமாக என் முன்னே வந்து அமர்ந்தது. ஏற்காடு செல்லும் பாதையில் நாற்பதடி பாலம் உள்ளதல்லவா அங்கு தான். காட்டுப் பஞ்சுருட்டானின் காட்சி கிடைத்த அந்தத் தருணம் எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஒருசேர அளித்தது. அப்படி எதிர்ப்பாராத நேரத்தில் நாம் விரும்பிய ஒரு பறவை கண் முன்னே வந்து நிற்பது அளவற்ற மகிழ்ச்சியைக் கொடுக்கும். பார்த்துவிட்டு எனக்குத் தலை கால் புரியவில்லை. கேமராவில் படம் எடுப்பதற்கு சரியான செட்டிங் வைக்க முடியவில்லை. ஏனெனில் எதிர் திசையில் சூரியன் இருந்தது. இருப்பினும் ISOவை அதிக அளவில் வைத்து படங்கள் எடுத்து விட்டேன். என் கண் முன்னே வந்து தரிசனம் தந்ததே எனக்கு மனநிறைவைக் கொடுத்தது.

(அன்று காட்டுப் பஞ்சுருட்டானோடு சேர்த்து மேலும் பல பறவைகளைக் கண்டேன். அப்பட்டியலைக் காண இங்கே சொடுக்கவும்.)

BBBE_Karthick_VS
காட்டுப் பஞ்சுருட்டான் Blue-bearded Bee-eater photographed by Karthick VS

நாம் எதையும் மிகவும் எதிர்ப்பார்த்து செல்லக்கூடாது. பறவைப் பார்த்தல் என்பது ஒரு தியான நிலை போன்றது. இயற்கை நம்மிடம் நன்றாகவே விளையாடும். எதை எப்போது நம் கண்ணிற்கு காட்ட வேண்டும் என்று அதற்குத் தெரியும். அந்தத் தருணங்கள் நமக்குக் கிடைக்க தொடர்ந்து பயணிக்க வேண்டும்.

காட்டுப் பஞ்சுருட்டானின் காட்சி கிடைத்த தருணம் Read More »

My first quest with birds

Writer: Senthil Kumar S, Headmaster (and birder), Panchayat Union Middle School, Krishnampudur, Salem.

I was one of the ordinary people who did not know much about birds. Now, I listen to their sounds and my head turns in the direction of the call. It was surprising to think how my ears weren’t able to hear them all these years. As I travel on the roads, naturally my eyes get tuned to the flying feathers in the sky. I am amazed at the changes that have risen within me. Busy with the city life, mobile phones and television, we never see what is around us and gradually we are getting detached from the natural world. When I was thinking of what inspired me to get involved in bird watching, I felt that I should write it.

FEATHERS IN A FEST

The interest/love for birds began to germinate on January 28, 2017. Yes, two years have passed. Nonetheless, the events of the day is still evergreen in memory. Tamil Nadu Science Forum (Salem), held a two-day grand science fest in Universal Matriculation School at Konganapuram. I didn’t have any special association with TNSF back then, but on the request of dear friend Jayamurugan T, I participated in the event with my family and 19 students. It certainly turned out to be a life-changing one.

Science Fest
Part of the crowd in the Thulir Science Festival – Photo: Ganeshwar SV

THAT’S ME, SIR. SHALL WE START?

There were several sessions such as simple science experiments, night sky watching, puppetry and so on. One of those was bird watching. In the invitation, the time given was 06.00 am IST. Well, honestly it was really annoying as people woke me up at 05.00 am because I’m one among those who get out of bed by 7 or later in the morning.

What is there to know about birds? Don’t I know about them? With these thoughts, I got ready to go. More than a hundred students were already waiting in the playground. Myself and my students joined them. A young man who looked like in his early twenties was present at the scene.

Me: Thambi*, you have also come for bird watching?

He: Yes, sir.

(In the midst of many young people spending their time in trivial issues, it was somewhat surprising and good to see someone who had come to see birds joining the school students. I thought to myself.) (*In Tamil, ‘thambi‘ means younger brother).

Me: See thambi, we all have come but the enthusiast who should explain about birds haven’t arrived yet. 

He (with a smile): That’s me sir. Shall we start? 

INTO A NEW WORLD 

I was expecting someone aged around 50 but here’s a young man, 20 – 23 years of age who was in charge of leading the massive group. It was a bit embarrassing to think that. Everyone stepped out of the school gate and started to walk on the road. But I stepped into a stunning new world. It was filled with feathers of different colours and songs of melodious notes. On seeing every new bird, I was like, “Wow! How beautiful it is! How did I miss seeing it all these days despite crossing them everyday?”

8 PUSU by Ravi
Purple Sunbird male in breeding plumage – Photo: Dr. M. Ravi (Vet)

It was surely surprising to see someone more than twenty years younger than me, giving a clear explanation about the birds which I didn’t know in all my 42 years of life. The beauty of feathers attracted me so much. All I knew was only the crows and sparrows but we enjoyed seeing 21 species (including Bulbuls, Drongo, Sunbirds, Babblers and Roller) in that one hour walk.

FLYING WITH FAMILY

If twenty species live around this school area, then what kind of rare and beautiful will be present in habitats such as rivers, forests and mountains? My heart felt that it was my first job to see them and at once I consented to my feeling. In fact more than me, the event created a bigger impact in my son Subramania Siva, a student of ninth grade and my wife Vadivukkarasi.

Now, our son is a dedicated birder than two of us. There is no need to pat him several times to wake him up in the morning. He jumps out of bed at five o’clock and pulls me to take him to the nearby Pavalathanoor Lake. Our school students are also meticulously recording birds near their homes as well as in the school campus. It is heartening to see a wonderful change in my students not just in contributing to conservation and getting connected with Nature but also in their personal character.

After the event, from the next day, I have started to fly with my family to enjoy birds in lakes, reservoirs, mountains and forests. I wish every family to spread their wings and fly like birds! Happy Birding!

(Note: This is the English version of the article – பறவைகளோடு என் முதல் பயணம்.)

My first quest with birds Read More »

தாரமங்கலத்தின் தாமரைக்கோழிக்குப் பேராபத்து

எழுத்து: அ. வடிவுக்கரசி, ஆசிரியை (& பறவை ஆர்வலர்), ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கிருஷ்ணம்புதூர், சேலம்.

பள்ளி முடிந்து மாலை வீட்டிற்குத் திரும்பும் போது நானும் என் கணவரும் வழியில் தாரமங்கலத்தில் உள்ள பவளத்தானூர் ஏரியில் பறவைகளை இரசித்துவிட்டுச் செல்வது வழக்கம். அன்று மாலையும் அது போலவே இருநோக்கி (பைனாகுலர்) வழியாக பறவைகளைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.

ஒப்பனைத் தோற்றம்

அங்கு சில மாதங்களாகவே இரண்டு தாமரைக்கோழிகளைப் (PHEASANT-TAILED JAÇANA) தினசரி பார்ப்போம். (ஆங்கிலத்தில் ஜக்கானா அல்ல. ஜசானா எனப் படிக்கவும்) சாதாரண நாட்களில் நாம் பெரிதும் ஒப்பனை செய்துகொள்ள மாட்டோம். ஆனால் திருமணம் போன்ற விழாக்காலங்களில் அனைவரும் அழகாக ஒப்பனை செய்து கொள்வது இயல்பானது. அது போலவே தான் தாமரைக்கோழியும் இனப்பெருக்கக் காலம் அல்லாத நேரத்தில் பெரிதும் கவர்ச்சி இல்லாத ஒரு தோற்றமும் இனப்பெருக்கக் காலத்தில் மிக அழகியத் தோற்றமும் கொண்டிருக்கும். நீர்த்தாவரங்களின் இலைகளின் மீது நடப்பதற்கு ஏற்றவாறு உறுதியான கால்களும் மிக நீளமான விரல்களையும் கொண்டிருக்கும். இப்படி ஒரு அழகானப் பறவையை நேரில் தினசரி பார்த்தால் யாருக்குத்தான் பிடிக்காமல் இருக்கும்? ஒரு நாள் அதைக் காண முடியவில்லை என்றாலும் அது எங்கு சென்றிருக்கும், மீண்டும் நாளை வருமா, நம் கண்ணில் படுமா என்றெல்லாம் மனம் எண்ணத் துவங்கும்.

ptja by charles j sharp
இனப்பெருக்கக் காலத்தில் இல்லாத போதுள்ள தாமரைக்கோழியின் எளிய தோற்றம். படம்: சார்லஸ் ஜெ ஷார்ப்/விக்கிமீடியா
ptja by anonymus ebirder and sahana m
இனப்பெருக்கக் காலத்தில் அழகிய தோற்றத்தில் தாமரைக்கோழி. படம்: Sahana M/Macaulay Library/eBird

புதியதொரு குடும்பம்

ஒரு நாள் என் இருநோக்கி வழியே தாமரைக்கோழிகளை இரசித்துக் கொண்டிருந்தேன். அன்று தான் என் பறவை நோக்குதலில் நான் மிகவும் மகிழ்ந்த, நெகிழ்ந்த தருணமாக அமைந்தது. அப்போது பெரிய தாமரைக்கோழிகளுக்கு அருகில் ஏதோ சிறுசிறு அசைவு தெரிந்தது. அது என்னவாக இருக்கும் என்ற தேடலில் என் கண்கள் விரிந்தது. என்ன ஒரு ஆச்சரியம்! மகிழ்ச்சியில் மனம் மகிழ்ந்தது. என்னையும் அறியாமல் சத்தமாக தாமரைக்கோழி தன் குஞ்சுகளுடன் உள்ளது பாருங்கள் என்றேன். என் கணவரும் முதலில் நம்ப முடியாமல் உற்றுநோக்கிவிட்டு ஆமாம் அது தாமரைக்கோழியின் குஞ்சுகள் தான் என்றார்.

பொறுப்பான பாதுகாப்பு

என்ன ஒரு அழகு! பார்க்கப் பார்க்க அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. மொத்தம் நான்கு குஞ்சுகள் இருந்தன. அவை தாய்ப்பறவையின் காலருகிலேயே இரையெடுத்துக் கொண்டிருந்தன. இரு பெரிய பறவைகளில் ஒன்று மட்டுமே குஞ்சுகளுடன் இருந்தது. மற்றொன்று சற்று தூரத்தில் இருந்தது. அதைக் கண்டவுடன் குஞ்சுகளுடன் இருப்பது தாய் என்றும் தொலைவில் இருந்து காவல் காப்பது தந்தை என்றும் நாங்களே நினைத்து பேசிக்கொண்டோம். குஞ்சுகள் இருக்கும் எல்லைக்குள் மற்ற நீர்ப்பறவைகள் வந்தால் அவற்றை இரு பறவைகளும் உடனே சென்று விரட்டிவிடும். அன்றிலிருந்து தினமும் காலையும் மாலையும் அவற்றைப் பார்க்காமல் என்னால் இருக்க முடியவில்லை.

குடும்பத்தைக் காணவில்லை 

ஒரு நாள் இரவு மழை பெய்ய ஆரம்பித்தது. எனக்கு உடனேயே தாமரைக்கோழி குடும்பத்தின் நினைவு வந்துவிட்டது. மழையில் அந்த குஞ்சுகள் நனைந்து விடுமோ? அவற்றுக்கு காய்ச்சல் வந்து விடுமோ? அவற்றைத் தாய்ப்பறவை எப்படி மழையிலிருந்து காப்பாற்றும் என்றவாறு கவலையில் நான் புலம்பிக் கொண்டிருந்தேன். இரவு முழுவதும் எனக்குத் தூக்கம் வரவில்லை. விடிந்தவுடன் என் கணவரிடம் சீக்கரம் சென்று அவற்றைப் பார்த்து வாருங்கள் என்று அவசரப்படுத்தினேன். நானும் அன்று என் சமையல் வேலைகளை விரைவாக முடித்துவிட்டு இருவரும் வேகமாகக் கிளம்பி பவளத்தானூர் ஏரியை அடைந்தோம். என் கண்கள் ஆர்வமாக அவற்றைத் தேடியது. ஆனால் காணமுடியவில்லை. வெகுநேரம் தேடியும் இல்லவே இல்லை. இரவு பெய்த மழையில் அவை என்ன ஆனதோ? எங்கு போனதோ? என்ற கவலை மேலோங்கியது. அந்தக் கவலையுடனேயே பள்ளிக்குச் சென்றுவிட்டேன்.

வேண்டினேன் கிடைத்தது 

என் மனம் மட்டும் என்னை அறியாது அவற்றின் நலனுக்காக இறைவனிடம் வேண்டிக்கொண்டே இருந்தது. மீண்டும் பள்ளி முடிந்து மாலை பவளத்தானூர் ஏரிக்கு வந்து என் உள்ளம் கவர் தாமரைக்கோழி குடும்பத்தை மீண்டும் தேடினேன். சற்று தொலைவில் அது போலவே ஒரு பறவை இருப்பதை உணர்ந்தேன். எனக்கு ஆர்வம் மிகுந்தது. இருநோக்கி இருந்தாலும் அவற்றைத் தொந்தரவு செய்யாமல் முடிந்த அளவு அருகில் சென்று பார்த்தேன். அப்பாடா! என் உள்ளங்கவர் குடும்பம் பாதுகாப்பாக இருந்தது. மனம் எல்லையற்ற மகிழ்ச்சியில் ஆழ்ந்தது. அப்போது தான் நெஞ்சம் நிம்மதி அடைந்தது. இவ்வாறே நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அவற்றை கண்டு மகிழ்ந்து கொண்டிருந்தோம்.

ptja 11
தாரமங்கலத்தின் தாமரைக்கோழி குடும்பம். படம்: செ. சுப்ரமணிய சிவா

அப்பாவிகளின் படுகொலை!  

திடீரென ஒருநாள் மாலை அவற்றுக்கு மேலும் ஒரு பேராபத்து வரும் என்று கனவிலும் நினைக்கவில்லை. அன்று மாலை நான் பள்ளியிலிருந்து வரும்போது ஏரிக்குள் ஐந்தாறு நபர்கள் அங்கிருந்தப் பறவைகளை எல்லாம் வேட்டையாடிக் கொண்டிருந்தார்கள். அந்த சமயத்தில் தாமரைக்கோழி மட்டுமல்ல வெண்மார்பு கானாங்கோழி, தாழைக்கோழி என பல பறவை இனங்கள் தம் சந்ததியைப் பெருக்கி இருந்தன. அன்று அனைத்துப் பறவைகளும் தப்பிக்க வழி தெரியாது அலறிக் கொண்டிருந்தன. அந்நபர்களை நாங்கள் அழைத்தோம். எங்களிடம் இருநோக்கியும் கேமராவும் இருப்பதைக் கண்டவுடன் அவர்கள் சிதறி ஓடினார்கள். ஒருவரை மட்டும் விடாது அழைத்து இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் எனக் கேட்டோம். அதற்கு நண்டு, மீன் ஆகியவற்றை பிடிக்கிறோம் என்று கூறினார். ஆனால் நீங்கள் பறவைகளை பிடித்து முள் புதருக்குள் ஒளித்து வைத்ததைக் கண்டேன் என்று சொன்னவுடன், இல்லை இனி அவ்வாறு செய்யமாட்டோம் எனக்கூறிவிட்டு ஓடிவிட்டார். எனக்கோ மனம் ஆறவில்லை.

அங்கு பாலம் கட்டும் பணியில் இருந்த ஒருவர் இவற்றை எல்லாம் அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தார். அவர் எங்களிடம் வந்து அவர்கள் பொய் சொல்வதாகவும் பறவைகளைப் பிடித்து வேட்டிக்குள் ஒளித்து வைத்து எடுத்துச் சென்றுவிட்டார்கள் என்றார். அவரிடம் இனி இவர்கள் போல் யாராவது இங்கு வந்து பறவைகளை வேட்டையாடி கொலை செய்தால் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள் என்று கூறிவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டோம். இருந்தாலும் அதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. வீட்டிற்கும் வந்ததும் என்னால் நிம்மதியாக இருக்கவும் முடியவில்லை. ஐந்து நிமிடத்தில் என் கணவரிடம் மீண்டும் சென்று அங்கு பார்ப்போம் என்று கூறினேன். அந்தக் கொலைகாரர்கள் மீண்டும் வந்தார்களா? என் குட்டி தாமரைக்கோழிகள் உயிருடன் உள்ளதா? என்று தெரிந்து கொள்ள கிளம்பினோம். ஆனால் அங்கு ஒருவரும் இல்லை.

அங்கு மேம்பால வேலையில் இருந்தவர் மட்டும் எங்களிடம் வந்து நீங்கள் சென்றவுடன் அவர்கள் மீண்டும் வந்து புதருக்குள் ஒளித்து வைத்திருந்த பறவைக் குஞ்சுகளை எடுத்துச் சென்றனர் என்றார். எனக்கு வேதனையாக இருந்தது. மீண்டும் என் கண்கள் தாமரைக்கோழிகளைத் தேடியது. ஆனால் அங்கு ஒரு பறவையும் இல்லை. கண்கள் குளமாயின. அன்று இரவு தூக்கமே வரவில்லை. மறுநாள் காலை பறவைகளின் நிலை குறித்த கவலையோடு மீண்டும் பவளத்தானூர் ஏரிக்குச் சென்றோம். ஒரு சில பறவைகளே இருந்தன. மீண்டும் எனக்கு ஏமாற்றம். தாமரைக்கோழிகள் குறித்த கவலை மேலிட்டது. ஒரு வேளை வேட்டையாடப்பட்டிருக்குமோ? என மனம் அச்சப்பட்டது. இந்த மனிதர்கள் மீது எனக்கு கோபமும், வெறுப்பும் ஏற்பட்டது. இதற்கு ஒரு தீர்வு காணவேண்டும் என சிந்தித்தது. அன்று மாலை நான் பள்ளியிலிருந்து வரும்போது ஏரி நிசப்தமாக இருந்தது.

wbwat by srikanth mannepuri and conservation india
வேட்டையாடப்பட்ட வெண்மார்பு கானாங்கோழிகள். Representational image. படம்: Srikanth Mannepuri/Conservation India

தொடரும் கொலைகள் 

மீண்டும் ஒரு சிறிய தேடல் ஏமாற்றத்துடன் வீட்டை அடைந்தேன். சிறிது நேரத்திற்குள் என் மகன் சுப்ரமணிய சிவா பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தான். அவன் வீட்டிற்குள் நுழைந்தவுடன், “அம்மா வாங்க உடனே ஏரிக்கு போகலாம்; மீண்டும் ஆட்கள் இறங்கி பறவைகளை வேட்டையாடுகிறார்கள். நான் பேருந்திலிருந்து பார்த்தேன்” என்றான். உடனே நாங்கள் கிளம்பிப் போனோம் அவன் சொன்னது சரிதான். அவர்களை அழைத்து முதலில் இது தவறு இவையெல்லாம் அரியவகை பயனுள்ள பறவைகள் இவற்றை வேட்டையாடுவதால் உங்களுக்கு என்ன பெரிதாகக் கிடைத்துவிடப்போகிறது என்று அறிவுரைக் கூறினேன்.

நாங்கள் கேமிரா வைத்திருப்பதைப் பார்த்து பயந்து போனார்கள். நாங்கள் உங்களைப் புகைப்படம் எடுத்துவிட்டோம். இந்த ஏரி மாவட்ட ஆட்சியர் அவர்களின் நேரடிக் கண்காணிப்பில் உள்ளது என்று கூறவே அவர்கள் பயந்து இனி இவ்வாறு செய்யமாட்டோம் என்று கூறி கிளம்பிவிட்டனர். இருப்பினும் என் தாமரைக்கோழி குடும்பத்தை மட்டும் பார்க்கமுடியவில்லை. இரண்டு நாட்கள் ஏமாற்றத்துடனே போனது.

வாழக் கிடைத்த ஒரு வாய்ப்பு 

பின்னர் அதோ வந்துவிட்டது என் தாமரைக்கோழிகள் என்று எனக்குள் ஒரு மின்னல் மகிழ்ச்சி ஏற்பட்டது. ஆம்! அவற்றின் தரிசனம் மீண்டும் கிடைத்தது. மீண்டும் அதன் குஞ்சுகளை எண்ணிப்பார்த்தேன் ஆஹா! என்ன சாதுர்யம்! எவ்வளவு திறமையாக அதன் குஞ்சுகளை அது காப்பாற்றியுள்ளது என் நினைத்து மகிழ்ந்தேன். நிம்மதிப் பெருமூச்சு வந்தது. இன்றுவரை அது தன் குஞ்சுகளை மிகத் திறமையாக காத்து வளர்த்து வருகிறது. குஞ்சுகள் இப்போது பறக்கும் அளவிற்கு வளர்ந்துவிட்டன. சில மனிதர்களின் கொடூர எண்ணங்கள் மற்றும் செயல்களினால் ஏரியில் பல பறவைகள் வேட்டையாடப்பட்டு விட்டன. இதைத் தடுக்க தொடர்ந்து ஏரியை கண்காணிக்க வேண்டும். எப்படியோ இந்த முறை தாமரைக்கோழி குடும்பம் தப்பித்து வாழ்வதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

பறவைகளின் வாழ்வில்தான் எவ்வளவு சவால்கள். பறவையைப் போல் பிறந்தால் மகிழ்ச்சி என நினைத்திருந்த எனக்கு இந்த அனுபவம் பறவைகளைப் பாவமாகவும் சமூகப் போராளிகளாகவும் காட்டியது. காலை விடிந்தவுடன் உணவு, பாதுகாப்பு, உறைவிடம் என அனைத்துச் சவால்களையும் ஒவ்வொரு நொடியும் அனுபவிக்கும் போராளிகள்தான் பறவைகள். அவற்றுக்கு நாம் ஏதாவது ஒரு வகையில் உதவியாக இருந்து கடமையாற்ற வேண்டும் என்ற விதை என்னுள் ஆழப் பதிந்தது.

தாரமங்கலத்தின் தாமரைக்கோழிக்குப் பேராபத்து Read More »

DARTER – Vol. 1 – Issue 8 (Oct-Dec 2018)

EDITOR’S NOTE 

“Right from the beginning of the migratory season, birders are not only exploring new locations but also they are dedicated to monitor old ones to catch some new and rare birds. The tremendous efforts by our birders have resulted in some excellent records and high counts in the last quarter of 2018. As usual, outreach works are going strong and steady. With this 8th issue, DARTER successfully completes two years of online publication. Full credits to birders, readers, seniors and all well-wishers for their continued support. Sightings and records which are entered in eBird are only taken into account towards the writing of this e-magazine.” —Ganeshwar SV.

OCTOBER BIG DAY

During the October Big Day on October 6, 2018, birders collectively recorded 96 species and submitted 209 checklists in total. The participants were Subramania Siva, Senthil Kumar, Vadivukkarasi, Angeline Mano, Pradeepa Sudhakar, Jayalalitha Pagadala and students of Krishnampudur. At the State-level, Salem district was ranked 2nd and 3rd place in terms of number of checklists and number of species respectively. The interesting sighting of the day was OSPREY Pandion haliaetus by Subramania Siva. Please see the complete checklist here.

NOTABLE SIGHTING

On October 28, 2018, Kasiviswanathan A photographed a Fork-tailed Drongo-Cuckoo Surniculus dicruroides near Kurumbapatti which happens to be the second record for Salem. Please see the complete checklist here.

FTDC by KVA
A FORK-TAILED DRONGO-CUCKOO photographed by Kasiviswanathan A

OUTREACH (1) 

On November 2, 2018, Rajangam P gave an interesting introductory talk on ‘Birding and Common Birds’ at Jayam Academy CBSE Campus and encouraged the students to a short session of Campus Bird Count.

Rajangam P at Jayam Academy
Rajangam P during his presentation

NEW RECORD (1)

On November 4, 2018, Senthil Kumar and Vadivukkarasi A photographed COMMON CUCKOO Cuculus canorus (is actually not common but rare) at Pannavadi, Mettur which is the first record for Salem. They sighted five individuals of the species. Please see the complete checklist here.

COCU by Vadivu
Young COMMON CUCKOO photographed by Vadivukkarasi A

SÁLIM ALI BIRTHDAY CELEBRATIONS

To commemorate the birth anniversary of legendary ornithologist, Dr. Salim Ali, several programs such as classroom presentations with songs and games, drawing competitions, bird walks were conducted at many schools including Panchayat Union Primary School, Neermullikuttai (conducted by Kalaiselvan V), Panchayat Union Middle School, Krishnampudur (Senthil Kumar S) and Panchayat Union Middle School, Thalavaipatty (Rajangam P).

KSS by SS
One of drawings by a student of P.U.M.S. Krishnampudur

YERCAUD EXPERIENCE 

During the last week of November, school teacher and a well-known birder Selvaganesh K visited Yercaud with his friends. Though he says it was a non-birding trip, his experience tells us a different story. Please have a read about it, here.

OHT by SGK
ORANGE-HEADED THRUSH photographed by Selvaganesh K at Yercaud

5TH TAMIL BIRDERS MEET

With more than 160 participants from many parts of Tamil Nadu and neighboring states, the 5th Tamil Birders Meet was the best so far. It was organized by Wildlife Association of Rajapalayam (WAR) in association with TamilBirds. WAR deserves a huge and special appreciation for their stellar efforts in organizing this memorable meet in a wonderful manner.

Nineteen members from Salem Ornithological Foundation participated in the event which was the second largest representation from a district after SACON, Coimbatore.

NEW CALL RECORD

Inspired by one of Kerala’s senior birders, Namassivayan Lakshmanan’s talk on Tips for Bird Call Recordings, many Salem birders started to record bird calls. That resulted in a fantastic record recently. On December 7, 2018, Ganeshwar SV and Divya Subramani recorded the call of STRIATED HERON Butorides striata at Kannankurichi Mookaneri Lake. This is the first call record of the bird to be entered in eBird India. To hear the call, please see the complete checklist here.

eBIRD HIGH COUNTS

S.No.

COMMON NAME HIGH COUNT OBSERVER DATE 2018
1 Black-winged Kite 5 Senthil Kumar

October 6

2

Barn Swallow 2500 Vadivukkarasi A October 6
3 Red-wattled Lapwing 42 Rajangam P

November 2

4

Common Cuckoo 5 Vadivukkarasi A November 4

5

Rufous Babbler 5 Selvaganesh K November 21

6

Crested Treeswift 30 Selvaganesh K

November 22

7

White-bellied Drongo 9 Karthick VS November 25

8

Small Pratincole 32 Subramania Siva December 9

9

Tree Pipit

10 Senthil Kumar

December 9

10 Common Myna 150 Elavarasan M

December 11

SMPR by Siva
SMALL PRATINCOLE photographed by Subramania Siva

NEW RECORD (2) 

On December 9, 2018, Kasiviswanathan A spotted and photographed the juvenile of EGYPTIAN VULTURE Neophron percnopterus at Kannankurichi (Mookaneri) Lake. Please see the complete checklist here.

The other and only evidence for previous published sighting of the Egyptian Vulture around Salem comes from a statement in the Vernay Scientific Survey of the Eastern Ghats, conducted in 1929—“on the eastern side (of Madras Presidency), there is very little information. The Survey reported a single bird on the Chitteri plateau.” Today, most of the Chitteri range falls outside Salem’s political boundaries. Hence, this sighting by Kasiviswanathan A is the first record with a photograph and carries much significance. This is also the one and only sighting of Egyptian Vulture in the entire Tamil Nadu for the year 2018. (Source: Tamil Nadu eBird)

Egyptian Vulture
A juvenile EGYPTIAN VULTURE photographed by Kasiviswanathan A

OUTREACH (2) 

On December 13, 2018, Rajangam P gave a talk about several aspects of birding as well as his experience and learning from the 5th Tamil Birders Meet in the Thursday weekly meeting of Tamil Nadu Science Forum, Salem.

TNSF 13Dec2018
Rajangam P sharing his experience in birding

BIRD WALK (1) 

Inspired by P Rajangam’s talk, Bharath Kumar K and Suresh G coordinated several members from Tamil Nadu Science Forum (Gugai branch) with the help of Shanmugasundaram to participate in a Bird Walk at Kannankurichi Mookaneri Lake on December 15, 2018. The bird walk was led by members of Salem Ornithological Foundation in which twelve people participated.

BW KML
Participants of the Bird Walk with artist & photographer Kasiviswanathan A (in camo)

A FAMILY’S EFFORTS 

It is well-known that the family of Senthil Kumar S, Vadivukkarasi A and Subramania Siva S are birders. Since their first sighting of White-naped Tit Machlolophus nuchalis, they have been monitoring the species throughout this year. On December 15, 2018, they saw the bird for the 12th time! Please see the complete checklist here. However, the sightings haven’t come that easy. Senthil Kumar S says that he and his family visited the location for more than 75 times this year. Salem Ornithological Foundation applauds and salutes the family for their consistent efforts in bird monitoring.

This also the only place in the entire Southern India where the bird has been sighted eleven times in the same spot. In Tamil Nadu, the White-naped Tit is known to occur only in Salem district till date. (Source: eBird India)

WNT by Siva 9 dec
WHITE-NAPED TIT photographed by Subramania Siva

OUTREACH (3) 

On December 30, 2018, one of our members, Tamil Selvan A was invited to give a talk on birds in the General Body meeting of Civic EXNORA. The program was coordinated by Shanmugasundaram of Tamil Nadu Science Forum (Gugai) in which 42 people participated.

TSA
Part of the keen crowd listening to Tamil Selvan A

BEGIN YOUR NEW YEAR WITH BIRDS 

Are you a bird lover looking to begin your New Year with birds? Don’t know where to start? We have got several New Year Birding Resolutions for both amateurs and veterans. An article written by one of our members was published on December 29, 2018 in ‘The Hindu Tamil’ under ‘Uyir Moochu’ section. Do give a read here. To know more and to participate in the monthly and yearlong eBirding challenges by BirdCount India, please click here.

NYR
via Bird Count India

The following photographs are from the last three months, clicked by Salem birders and each of it has be uploaded to eBird by the respective observers. May your life be as colorful as birds!

Salem Ornithological Foundation heartily wishes a Happy New Year 2019 to everyone to have a peaceful and prosperous life with more memorable moments in the wild!

DARTER – Vol. 1 – Issue 8 (Oct-Dec 2018) Read More »

2020: பறவை ஆர்வலர்களுக்கான புத்தாண்டுத் தீர்மானங்கள்

புத்தாண்டு என்றாலே அவரவர் விருப்பங்களுக்கு ஏற்றவாறு சிறிதும் பெரிதுமாகப் பல்வேறு தீர்மானங்களை எடுப்போம். சுற்றுசூழல் ஆர்வலர்கள் மட்டுமின்றி, இயற்கை மீது காதல் விலகாத பலரும் ஒன்றுபடும் ஒரு அம்சம், பறவை நோக்குதல். பறவை நோக்குதலிலும் வல்வேறு சவால்கள் உண்டு, அவற்றைப் புதிய தீர்மானங்களாக எடுத்துக்கொண்டு இந்த ஆண்டில் அவற்றைச் சந்திக்க நாம் தயாராகலாம்.

தீர்மானம் 1: நம் வீட்டுப் பறவைப் பட்டியல்

நம்மை அடிக்கடி சந்திக்கும் நண்பர்கள், உறவினர்களை நினைவில் வைத்திருப்பது போல பறவை இனங்களையும் நினைவில் வைக்கப் பழகலாம். புத்தாண்டு முதல் காகம், குருவி ஆகியவற்றைத் தாண்டி, நம் வீட்டுக்கு வந்து செல்லும் பறவை இனங்களின் பெயரையும் எண்ணிக்கையையும் பட்டியலிடலாம். அவற்றில் நமக்குப் பிடித்த பறவைகளைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள முயலலாம். இதையே பணியிடத்திலும் பள்ளி, கல்லூரியிலும் கூடச் செய்ய முடியும். தொடர்ச்சியாக பறவைகளை நோக்க ஆரம்பிக்கும்போது, வெளிநாடு மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வலசை வரும் புதிய வகைப் பறவைகளையும் பார்க்கும் வாய்ப்பு நிறையவே உள்ளது!

BRSH by JJ Harrison
வலசை வரும் பழுப்புக் கீச்சான் Brown Shrike. படம்: ஜெ.ஜெ.ஹாரிசன்/விக்கிமீடியா

தீர்மானம் 2: தண்ணீர் வைத்தல்

பறவைகள் மீது பாசமும் அக்கறையும் உள்ள பெரும்பாலானோர் வீட்டில் அவற்றுக்குத் தண்ணீரும் உணவும் வைப்பது வழக்கம். இப்படி வைக்கும் போது தண்ணீரை பிளாஸ்டிக் கப் அல்லது வேறு பாத்திரங்களில் வைக்க வேண்டாம். இதில் வைக்கப்படும் நீர் வெயிலில் சூடாகி விடும். அதனால் மண் சட்டியில் நீரை வைப்பதே மிகவும் நல்லது.

கூடுதலாக இதில் ஒரு சவால் உள்ளது. பொதுவாக சட்டியில் ஆனந்தக் குளியல் போட்டு, உணவை நனைத்துச் சாப்பிட்டு, நீர் அருந்திவிட்டுத் தான் பறவைகள் செல்லும். இதனால் சட்டி அழுக்கடையும். குறைந்தது இரண்டு நாட்களுக்கு ஒரு முறையாவது சட்டியை சுத்தம் செய்ய வேண்டும். இதைத் தொடர்ச்சியாக செய்வது தான் சவாலே! சில நேரம் நீர் ஊற்றிய அடுத்த நாளே முழுவதும் அழுக்காகி இருக்கும். “நேத்து தான டீ சுத்தம் பண்ணேன். அதுக்குள்ள இப்படி அடையாளம் தெரியாத அளவுக்கு ஆட்டம் போட்டு வெச்சிருக்கீங்க,” என்று சுத்தம் செய்யும் போது வீட்டிற்கு வரும் காகங்களை அம்மா அன்பாகக் கடிந்துகொள்வார்.

குறிப்பு: உங்கள் வீட்டிலோ வீட்டின் அருகிலோ பூனைகள் இருந்தால் பறவைகளுக்கு உணவும் நீரும் வைப்பதைத் தவிர்க்கவும். உணவுக்காகவும் நீருக்காகவும் வரும் பறவைகளை பூனைகள் வேட்டையாடும் ஆபத்து உள்ளது என்பதே காரணம்.

தீர்மானம் 3: புத்தக வாசிப்பு

இந்த ஆண்டில் இயற்கை/பறவைகள்/சுற்றுச்சூழல் சார்ந்து குறைந்தபட்சம் ஒரு புத்தகமாவது வாசிக்க வேண்டும் என்பதே மிகவும் முக்கியமானத் தீர்மானம். இன்றைக்கு வாசிப்பு வெகு வேகமாகக் குறைந்து வருகிறது. பலரும் நகரும் காட்சிகள், துணுக்குச் செய்திகளையே விரும்ப ஆரம்பித்துவிட்டோம். ஆனால், இவை நம் கற்பனை வளத்தையோ சிந்தனையையோ அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதில்லை. அதனால் வாசிப்பு மிகவும் அவசியமாகிறது. குறிப்பாக, இயற்கை குறித்த பதிவுகளாக வரும் எழுத்தை வாசிப்பது நமது அனுபவத்தை பன்மடங்கு மேம்படுத்துகிறது. இயற்கை குறித்த நமது அறிவை இது விரிவடையச் செய்வதோடு மட்டுமல்லாமல் சுற்றுச்சூழல் சார்ந்த புரிதலையும் ஆழமாக்க உதவுகிறது. அத்துடன், புத்தகம் வாசிக்கும் பெரியவர்களைப் பார்த்து குழந்தைகளும் வாசிக்கத் தொடங்குவார்கள்.

BBT 1
தமிழில் சில பறவைப் புத்தகங்கள். பட உதவி: பின்ட்ரெஸ்ட்

தீர்மானம் 4: மக்கள் விஞ்ஞானி

சரி, இப்படிப் பல்வேறு வகைகளில் பறவை நோக்குதலில் ஈடுபட்டு, எழுதிச் சேகரித்துள்ள தகவல்களை என்ன செய்வது? இது பறவைகளுக்கு எப்படிப் பயனளிக்கும்? சந்தேகமே வேண்டாம்! இவை பறவைகள் பாதுகாப்பில் முக்கியப்பங்கு வகிக்கும். நம்மிடம் உள்ள தகவல்களை eBird என்ற சர்வதேச தகவல் சேகரிப்பு வலைத்தளத்தில் உள்ளீடு செய்வதன் மூலம், பறவைகள் சார்ந்த அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு நாமும் கைகொடுக்கலாம்.

eBird India
eBird India (www.ebird.org/india)

வாரத்துக்கு ஒரு முறை அல்லது மாதம் நான்கு முறையாவது இது போன்ற தகவல்களை eBirdல் உள்ளீடு செய்வது நம் அனுபவத்தை மேம்படுத்துவது மட்டுமில்லாமல், குறிப்பிட்டு ஒரு விஷயம் சார்ந்து ஏற்படும் மாற்றத்தைக் கண்காணிக்கவும் உதவும். eBirdல் ஒரு புதிய கணக்கை எவ்வாறு தொடங்குவது, அத்துடன் தேசிய அளவிலான மாதாந்திரப் பறவைக் கணக்கெடுப்புப் போட்டிகள் போன்றவைக் குறித்த தகவல்களுக்கு இங்கே சொடுக்கவும். பறவைகள் பாதுகாப்பில் அறிவியல் ஆராய்ச்சி மேற்கொள்ளும் விஞ்ஞானிகளுக்கு இப்படி உதவும் போது, நாமும் மக்கள் விஞ்ஞானி ஆகிவிடுகிறோம்.

தீர்மானம் 5: விழிப்புணர்வை விரிவாக்குவோம் 

இப்படிப் பல்வேறு வகைகளில் அனுபவம் பெற்ற பிறகு பள்ளி, கல்லூரிகளில் பறவைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்சிகளை நாமே நடத்தத் தொடங்கலாம். எனக்குத் தெரிந்த சில ஆர்வலர்கள் சில மாவட்டங்களில் தொடர்ச்சியாக செய்து வருகின்றனர். குறிப்பாக கல்லூரி மாணவர்களை அதிக அளவில் சென்றடைய வேண்டிய தேவை உள்ளது. எனவே இந்த ஆண்டு குறைந்தபட்சம் ஆறு பள்ளி/கல்லூரிகளில் பறவை நோக்குதலை அறிமுகப்படுத்துவோம். பறவை நோக்குதலைப் பொறுத்தவரை நெடிய அனுபவம் இருந்தால் தான் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்றில்லை. ஆர்வம் மட்டுமே அடிப்படை. இது போன்ற கூட்டங்களில் தொடக்கத்தில் பேசத் தயங்குபவர்கள், கூட்டங்களை ஏற்பாடு செய்வதற்கான ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்ளலாம்.

Feb 15 7 arts
சேலம் அரசு கலைக்கல்லூரியில் நடந்த பறவைகள் விழிப்புணர்வுக் கூட்டம்

தீர்மானம் 6: பறவை ஒலிப்பதிவாளர்

இருநோக்கியும் (பைனாகுலர்) கேமராவும் இல்லாததால் பறவை நோக்குதலை எப்படித் தொடங்குவது என்ற சந்தேகம் பலரிடம் உள்ளது. பறவை நோக்குதலுக்கு தேவைப்படும் ஒரேயொரு தகுதி நம் ஆர்வம் மட்டுமே. வெறும் கண்களால் பறவைகளைப் பார்க்கத் தொடங்கலாம். அடுத்ததாக, இன்று பலரிடமும் ஸ்மார்ட் ஃபோன்கள் உள்ளது. அதில் ஒரு ‘வாய்ஸ் ரெக்கார்டர்’ இருக்கும் அல்லது ஒரு செயலியைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதனைப் பயன்படுத்தி நாம் பார்க்கும் பறவைகளின் இனிமையான பாடல்களையும் ஒலிகளையும் பதிவு செய்ய முடியும். இப்படிச் செய்வதால் அந்தப் பதிவுகளை மீண்டும் கேட்டு மகிழ முடியும், அத்துடன் அவை முக்கிய ஆவணமாகவும் மாறும். அப்பறவைகளின் பெயர்களை எளிதில் கண்டு பிடிக்கவும் இந்தப் பதிவு உதவும்.

.WAV by Macaulay
கைபேசி மூலம் பறவை ஒலிகளை பதிவு செய்தல். பட உதவி: மெக்காலே/கார்னெல் லேப்

அத்துடன் நின்றுவிடாமல் நாம் பதிவு செய்து வைத்துள்ள ஒலிகளை eBird India, Xeno Canto போன்ற முறையானத் தளங்களில் பதிவேற்றம் செய்வது நம் முயற்சியைப் பயனுள்ளதாக்கும். இதை MP3 வடிவத்தில் செய்வதை விட .WAV வடிவில் பதிவேற்றம் செய்வது உகந்தது. மேலும் கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு இங்கே சொடுக்கவும். அனுபவமிக்கப் பறவை ஆர்வலர்களுக்கும் இது ஒரு சுவாரசியமான சவால்.

அதே போல அனுபவமிக்க பறவை ஆர்வலர்களும் ஒளிப்படக் கலைஞர்களும் தாங்கள் எடுத்துள்ள பறவைப் படங்களை கணியியில் மட்டுமே வைத்திருக்காமல் விக்கிமீடியா காமன்ஸ், eBird போன்ற பொதுத் தளங்களில் உள்ளீடு செய்தால் அனைவருக்கும் பயனளிக்கும்.

தீர்மானம் 7: தமிழகப் பறவை ஆர்வலர்கள் சந்திப்பு

சரணாலயங்களில் ஆயிரக்கணக்கில் பறவைகள் ஒன்று கூடுவது போல ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் மாநிலம் முழுவதுமிருந்து நூற்றுக்கணக்கான பறவை ஆர்வலர்கள், ஒளிப்படக் கலைஞர்கள், விஞ்ஞானிகள் என பறவைகள் மீது காதல் கொண்ட அனைவரும் தமிழகப் பறவை ஆர்வலர்கள் சந்திப்பில் ஒன்றுகூடி வருகிறார்கள். இரண்டு நாட்களுக்கு நடைபெறும் இந்த மாபெரும் சந்திப்பானது இது வரை ஆறு முறை நிகழ்ந்துள்ளது. இந்நிகழ்வில் கற்றுக்கொள்ள எண்ணற்ற விஷயங்கள் இருக்கும். வருகின்ற ஆண்டில் இறுதியாக இந்தச் சந்திப்பிலும் கலந்துகொள்ள வேண்டும் என்ற தீர்மானத்தை எடுத்து உங்கள் குடும்பத்துடன் வந்து கலந்து கொள்ளலாம்.

6வது தமிழகப் பறவை ஆர்வலர்கள் சந்திப்பின் நிகழ்ச்சி நிரல் கீழே:

தீர்மானம் 8: 12 புதிய பறவைகள்

புதிய ஆண்டில் இது வரை நாம் நேரில் பார்க்காத 12 புதிய பறவை இனங்களைப் பார்க்க வேண்டும் என்ற தீர்மானம்/சவாலை நாம் எடுத்துக்கொள்ளலாம். தமிழகத்தில் மட்டும் 500க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் புதிதாகப் பன்னிரண்டுப் பறவைகளை அடையாளம் கண்டு மகிழ்வது நிச்சயம் கடினமல்ல.

மேற்கண்ட தீர்மானங்களில் உங்களால் இயன்ற அனைத்தையும் எடுத்துக்கொள்வது அவசரமான வாழ்க்கையில் ஆசுவாசம் தருவது மட்டுமில்லாமல், இயற்கையுடனான நமது பிணைப்பை மீட்டெடுக்கவும் பெருமளவு உதவும். வாழ்வில் எதிர்கொள்ளும் அனைத்துச் சவால்களையும் நீங்கள் சாதனைகளாக மாற்றி பல வெற்றிகளைக் குவிக்க சேலம் பறவையியல் கழகம் தன் நெஞ்சார்ந்த வாழ்த்துகளை அனைவருக்கும் உரித்தாக்குகிறது.

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்! 

குறிப்பு: தி இந்து நாளிதழின் உயிர் மூச்சுப் பகுதியில் டிசம்பர் 29, 2018 அன்று “புத்தாண்டில் நீங்களும் பட்சிராஜன் ஆகலாம்” என்ற தலைப்பில் வெளியானக் கட்டுரையின் முழு வடிவம். எழுத்து: சு.வே. கணேஷ்வர், சேலம் பறவையியல் கழகம்.

2020: பறவை ஆர்வலர்களுக்கான புத்தாண்டுத் தீர்மானங்கள் Read More »

My first birding experience in the Shevaroys

Narration and photographs: Selvaganesh K, teacher and a well-known birder from Valparai, Coimbatore.

Recently, my college friends (who aren’t birders) planned a reunion and it was decided that we all can spend a few days in a hill station which none of us had been before. Yercaud in Salem district was the closest option. So we all decided to take a break and visit Yercaud.

A RUFOUS WELCOME

We arrived at Yercaud in the last week of November and stayed in Oyla Cottages. Later in the evening, ears felt like they are hearing Rufous Babblers Turdoides subrufa. I was pleasantly surprised by this warm welcome and hence I recorded the call to confirm it first. No sooner, I saw a Rufous Babbler on sentry duty. I took few pictures and checked Salem eBird to know more about the previous sightings. Though there was couple of sightings, it lacked media. Quickly, I made a checklist and uploaded the image. Next morning, I started early.

RUBA by SGK
A RUFOUS BABBLER at Yercaud

CALL CONFUSION

I am quite convinced that I heard Coppersmith Barbet Psilopogon haemacephalus but some corner of my mind is still doubtful whether it could be Malabar Barbet Psilopogon malabaricus. I have recorded the calls and have to work on finding it. Similarly, had confusion with the Flowerpeckers. Later when I got a good view, I confirmed it to be a Nilgiri Flowerpecker Dicaeum concolor. It was surely surprising to see one of the Western Ghats endemics in good numbers.

LITTLE GREEN JOBS

Surprisingly, I was able to hear both Green Warbler Phylloscopus nitidus and Greenish Warbler Phylloscopus trochiloides together. If it was in Western Ghats, say, there would be ten Greenish Warblers and just two Green Warblers. However, in Yercaud, I felt their numbers were more or less equal.

SHRIKING DIFFERENCE

In Valparai, I used to see good number of Long-tailed Shrikes Lanius schach but here I didn’t see any. Just saw couple of Brown Shrikes Lanius cristatus. This was one of the notable differences to me.

HIGH COUNT ALERT

While travelling in the Kuppanur road, I was delighted to find Greater Racket-tailed Drongo Dicrurus paradiseus, Bronzed Drongo Dicrurus aeneus and White-bellied Drongo Dicrurus caerulescens in the same spot. I also got a beautiful Blue-capped Rock Thrush Monticola cinclorhyncha.

Travelling further downwards, I saw some Swifts flying above. They were Crested Treeswifts Hemiprocne coronata in good numbers. Since I had seen them plenty of times in Western Ghats, there was no difficulty with the identification. Though they were more, I counted thirty individuals and entered only thirty in the checklist which happened to be the highest count of Crested Treeswifts in Salem eBird so far. The habitat was slightly scrub jungle and dry evergreen forest. It was in such similar habitats, I saw these birds in other locations previously.

BCRT by SGK
Winter visitor to the hills–BLUE-CAPPED ROCK THRUSH (male)

PIED LIFER IN THE PARTY

Next day, friends wanted to visit the various tourist destinations around. I happily ditched their request and started to bird. I searched online for rental bikes and found one at ‘Friends Cabs.’ It was Rs. 800 INR for 7 hours. I have been searching for my black and white lifer, the Pied Thrush for quite some time. I had an eye out for it since my arrival at Yercaud but haven’t had any luck until…

As soon as I caught and travelled in the Kiliyur Waterfalls Road for some distance, I was bestowed with an excellent ‘Mixed Hunting Forest Party’ of birds near a coffee plantation. You name it; I got it! From Fulvettas and White-eyes to Thrushes and Flycatchers, I felt like I was in the middle of a mini Western Ghats! Finally, before the party left the location, my lifer Pied Thrush Geokichla wardii arrived and gave a treat to the eyes! I also had a feeling that I saw Nilgiri Flycatcher Eumyias albicaudatus and a Rusty-tailed Flycatcher Ficedula ruficauda but they didn’t make it to the checklist as I couldn’t positively confirm their identification. Please see the complete checklist here.

IPF by SGK
An INDIAN PARADISE FLYCATCHER (male) at Kiliyur
OHT by SGK
Orange-headed Thrush (resident race) at Kiliyur
PITH by SGK
Lifer! PIED THRUSH (female)

LET’S BIRD RESPONSIBLY

The accessibility to some good patches is well connected by roads. I didn’t enter or step in many places as I didn’t know whether it was a public or private land. If local people or a local birder were with me, it could have been great. So like we always do in Valparai, I just did my birding from roads because entering into forests without proper permission from the Forest Department is an offence. It is also unethical birding. Let us all be responsible birders!

I don’t know much about the threats revolving around these birds and their last remaining wonderful habitats here in Yercaud but it is place that should certainly be protected. If people of Salem want to see some Western Ghats birds, you really don’t have to travel here. You have a special hill range named Shevaroys, right on top of your heads!

Overall, I got 75 species of cool and colourful birds during my stay. Highlights were Banded Bay Cuckoo, Rufous-bellied Eagle, 2 species of Bee-eaters, 3 species of Barbets and Thrushes (each), 4 species of Flycatchers, 5 species of Woodpeckers and Drongos (each), and many more!

BBBE by SGK
A BLUE-BEARDED BEE-EATER at Kuppanur Road

Note: Looking forward to a proper trip soon to explore more because honestly, I didn’t plan this one for birding. Believe me, guys!

My first birding experience in the Shevaroys Read More »

வெள்ளைப் பூனையும் கறுப்புக் கரிச்சானும்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சிறுவர்களுக்காக வெளியிடும் “துளிர்,”  அறிவியல் மாத இதழில் ஆகஸ்ட் 2018 பிரசுரமானக் கட்டுரையின் முழு வடிவம். எழுத்து: சு.வே. கணேஷ்வர்.

அன்று காலை சின்னான்களின் (Red-vented Bulbul) தொடர்ச்சியான எச்சரிக்கை ஒலி கேட்டு வெளியே வராமல் இருக்க முடியவில்லை. வீட்டின் பின்புறம் என்பதால் பைனாகுலரோ காமிராவோ எடுத்துக்கொள்ளவில்லை. சுமார் ஒரு நிமிடம் இருக்கும்; உடலில் சில வரிகள் கொண்ட ஒரு வெள்ளைப் பூனை மறைந்திருந்தது கண்ணில் பட்டது. கூடு ஏதேனும் அருகில் இருக்கலாம். நீண்ட நேரம் கத்தினாலும் பூனையைத் தாக்க சின்னான்களுக்குத் துணிவில்லை.

Tabby-Cat
உடலில் வரிகளோடு பூனை. பட உதவி: petsworld.in

வழக்கம் போலவே கரிச்சான் (Black Drongo) உதவிக்கு வந்து பூனையை விரட்ட முயற்சித்தது. ஆனால் அந்தத் தாக்குதல் முழு மனதோடு நிகழ்த்தப்படாதது சற்றே ஆச்சரியம் அளித்தது. அதன் இணை உடன் இல்லாதது காரணமாக இருக்கலாம். பூனையோ எதையும் கண்டு கொள்ளாமல் கூட்டைக் கண்டுபிடிப்பதில் முனைப்பாக இருந்தது.

கரிச்சானின் திட்டம்

கரிச்சான் சற்று அமைதியாக அமர்ந்து யோசித்தது. பின் தனது எச்சரிக்கை ஒலியை (Alarm call) அதிக சத்தத்துடனும், புள்ளி ஆந்தை மற்றும் வல்லூறு போலவும் ஒப்புப்போலி ஒலி (Mimicry) எழுப்ப ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் ஒரு மைனா ஜோடியும் ஒரு அண்டங்காக்கையும் அங்கு வந்தன. உடனடியாக மைனாக்கள் கத்த ஆரம்பித்தாலும் தாக்கத் தயங்கின. அண்டங்காக்கை தாக்க முற்பட்ட போது தான் மைனாக்களும் கரிச்சானும் இணைந்து கொண்டன. இந்த மும்முனைத் தாக்குதல் முயற்சியால் எரிச்சலடைந்த பூனை அவ்விடம் விட்டு ஒரு வித ஏமாற்றத்துடன் சென்றது. என் காலை உணவிற்குத் திரும்பிய போது அந்தக் கரிச்சான் வானில் வட்டமடித்துக் கொண்டிருந்த வல்லூறின் பின் பாய்ந்தது.

Black_drongo_(Dicrurus_macrocercus)_Photograph_by_Shantanu_Kuveskar
கரிச்சான். படம்: ஷாந்தனு குவேஷ்கர்

இது போன்ற பாதுகாப்புக் கருதியே சின்னான்கள், புறாக்கள், தவிட்டுக்குருவிகள், மாங்குயில்கள், கரிச்சான்கள் இருக்கும் இடத்திற்கு அருகில் கூடமைக்கும். நம்மைச் சுற்றியுள்ள பொதுப் பறவைகளின் மேல் சிறிது கவனம் செலுத்தினால் இது போன்ற பல அற்புதத் தருணங்கள் நம் அனைவருக்கும் வசப்படும்!

அன்றைய தினத்தின் பிற சுவாரசியங்கள்

–கதிர்க்குருவி (Plain Prinia), சாம்பல் கதிர்க்குருவி (Ashy Prinia), காட்டுக் கதிர்க்குருவி (Jungle Prinia) என மூன்று கதிர்க்குருவி இனங்களின் ஒலிகளையும் ஒரே சமயத்தில் கேட்டது.

–காலை வேலைகளுக்குப் பின் வேப்பமர நிழலில் இளைப்பாறும் போது ஒரு ஆண் கருந்தலை மாங்குயில் (Black-headed Cuckooshrike) தலைக்கு சில அடிகள் மேலே அமர்ந்து சத்தமாகக் கத்தியது புத்துணர்ச்சி அளித்தது.

–வீட்டின் முகப்பில் உள்ள மாதுளை மரத்திலிருந்து சின்ன மலர்கொத்தி (Pale-billed Flowerpecker) ஒன்று கூடு கட்டத் தேவையான சிலந்தி வலையை சேகரித்துக் கொண்டிருந்தது.

–சிறிய பஞ்சுருட்டான் (Green Bee-eater) ஜோடி தனது மூன்று இளம் குஞ்சுகளுக்கு உணவூட்டியக் காட்சி சிலிர்க்க வைத்தது.

–வீட்டருகே வலம் வரும் கீரி (Common Mongoose) ஒன்று அறுவடை செய்த வயலில் மேய்ந்து கொண்டிருந்த கவுதாரிகளின் (Grey Francolin) பக்கம் சென்றது. இதை சிறிதும் எதிர்ப்பாராத கௌதாரிகள் ஒரு வித்தியாசமான ஒலி எழுப்பி ஓடிச் சென்றன. கீரிப்பிள்ளை கௌதாரிகளைத் தாக்கும் நிகழ்வுகள் ஏதும் உள்ளதா எனத் தெரியவில்லை. ஆனால் நான் பார்த்த பொழுது கீரி தற்செயலாக அவ்வழியே வந்தது போலத்தான் தெரிந்தது; தாக்குவதற்கு அல்ல.

–மாலை நெருங்கிய வேளையில் மூன்று குயிலினங்களின் பாட்டு – குயில் (Asian Koel), சுடலைக் குயில் (Pied Cuckoo), அக்காக் குயில் (Common Hawk-Cuckoo) திசை எங்கிலும் எதிரொலித்தது.

–பல நாட்கள் தேடி உள்ளேன். எப்படியோ அன்று பைனாகுலரின் உதவியோடு ஒரு முறை இரவு நேரத்தில் சத்தமிட்டு அம்மாவை பயமுறுத்தியக் கொம்பன் ஆந்தை (Indian Eagle Owl) பாறைகளுக்கு இடையே மறைந்திருந்ததைக் கண்டுபித்து விட்டேன்.

IEO K
பாறைகளுக்கிடையில் கொம்பன் ஆந்தை

–வீட்டிற்குப் பின் இருக்கும் மலைகளின் போர்வையில் கதிரவன் உறங்கச் சென்ற பொழுது அதன் கடைசி ஒளிக்கதிர்கள் பெரிய பாறையின் மீது நின்றிருந்த ஒரு ஆண் மயிலின் மேல் பட்டுத் தெரித்த அழகை வர்ணிக்க சொற்களே இல்லை!

–இரவு உணவுக்குப் பின் தூங்கச் செல்கையில் அக்காக் குயில் மற்றும் புள்ளி ஆந்தையின் (Spotted Owlet) ஒலிகள் இரு பக்கங்களில் இருந்து தாலாட்ட நாளைய தினத்தை எதிர்நோக்கி நிம்மதிப் பெருமூச்சுடன் தூங்கிவிட்டேன்.

வெள்ளைப் பூனையும் கறுப்புக் கரிச்சானும் Read More »

DARTER – Vol.1 – Issue 7 (Jul-Sep 2018)

EDITOR’S NOTE

“Our birders are always on the move and get something even if it is off season to look for special birds. Nothing slows them down. An iconic bird sighted after nearly nine decades, field trip, outreach, a rescue and more student activities have all made this third quarterly issue a fantastic one. Don’t miss the quiz which is waiting for you in the end! The migrants have already started to arrive and let’s all go catch some cool birds from foreign countries. Happy birding; have a great season ahead!”-Ganeshwar SV.

NEW RECORD (1) 

On July 1, 2018, Senthil Kumar and Subramania Siva S recorded INDIAN GREY HORNBILL Ocyceros birostris in Salem after 89 years. This is the first known photographic evidence of the bird from the district. The previous published record was during the Vernay Scientific Survey of the Eastern Ghats in 1929. Please see the complete checklist here.

IGHO by Subramania Siva Jul 1
An INDIAN GREY HORNBILL photographed by Subramania Siva in Salem

DREAM SHOT

Though the ASIAN PALM SWIFT Cypsiurus balasiensis is one of the common birds, it is the dream of every birder to capture it when perched. Our birder and teacher Kalai Selvan V has done just that in one of his birding sessions!

3 July
ASIAN PALM SWIFT at nest photographed by Kalai Selvan V

FESTIVAL OF TREES

Students of Indian Roller Birding Club belonging to Panchayat Union Middle School, Thalavaipatty, celebrated ‘Van Mahotsav’ (festival of trees) to create awareness in the minds of people about conservation of forests and planting of new trees. The students were ably supported and encouraged by their teacher and birder, Rajangam P.

Van Mahotsav 2
Rajangam P distributing tree saplings to students

FIELD TRIP

On August 18, 2018, Kalai Selvan V and his students from Green Bee-eater Birding Club visited Godumalai, a hillock around Neermullikuttai and learnt to identify several common birds in their region.

WILDLIFE IN NATIVE LANGUAGE 

On August 25, 2018, Kalai Selvan V introduced several books and magazines on Wildlife in Tamil to promote the habit of reading and better understanding of Nature among the students of Panchayat Union Primary School, Neermullikuttai.

25 Aug
Class IV students with wildlife magazines and books. Photograph by Kalai Selvan V

SOWING SEEDS OF LIFE

On August 20, 2018, students of Panchayat Union Primary School, Neermullkuttai prepared the nursery bags with seeds of several trees with the help of their teacher Kalai Selvan V. The students repeated the process twice in August.

Sap
Students busy preparing nursery bags with seeds of Bixa orellana

NEW RECORD (2)

On September 2, 2018, Senthil Kumar and Subramania Siva S recorded LESSER FISH EAGLE Haliaaetus humilis which is the first record with a photograph. Please see the complete checklist here.

LFE by Subramania Siva
A LESSER FISH EAGLE photographed by Subramania Siva

NEW RECORD (3)

On September 21, 2018, Senthilkumar S photographed WHITE-TAILED IORA Aegithina nigrolutea for the first time in Salem. Please see the complete checklist here. The previous record (call record) is by Patrick David J in his “Preliminary assessment of avian diversity and abundance in Shevroy hill range, Eastern Ghats, Tamil Nadu,” which was published in the Newsletter for Birdwatchers (Vol.52: No.5; Sep-Oct 2012).

WTIO by Subramania Siva
A WHITE-TAILED IORA photographed by Senthil Kumar

RESCUE

“Few days ago, a BARRED BUTTONQUAIL Turnix suscitator was mobbed by Crows. Seeking shelter somewhere, it entered our home. ‘God has sent you to the right place,’ I thought to myself. After an hour of allowing it to rest, I took it to a nearby forest area and it was released by my son Tharun. This is the third species to be saved by his hands. Every time when we rescue a bird, since he is a child, he used to say, ‘Appa, let us keep and take care of it.’ I had explained to him several times in a simple way, why it is bad for the bird to be kept at home. He seemed to have understood and these days he tells me that rescued birds are to be released for their good.”

– Kalai Selvan V about his rescue on September 24, 2018.

BBQ Kalai Selvan September
A BARRED BUTTONQUAIL rescued by Kalai Selvan V

OUTREACH

On September 27, 2018, Kalai Selvan V gave an interesting introductory talk on Birding at Pachayat Union Middle School, Kurichi and took the students for a Bird Walk around the school campus.

Kurichi 6
On song! Kalai Selvan V making the session a fun-filled one

STUDENTS’ CORNER 

Inspired by Kalai Selvan V, a fifth class student named Kasinathan V has started birding regularly and sketching birds has become his favorite pastime. Salem Ornithological Foundation appreciates the continuous efforts taken by the teacher and congratulates the student for his beautiful sketches.

Can you identify and name all the birds in the sketch? Do post your answers in the comments.

DARTER – Vol.1 – Issue 7 (Jul-Sep 2018) Read More »

My journey into Birding

Angeline Mano, 20

Birding

Better than all measures,

Better than all treasures,

Those in books are found.

SEEDS OF FEATHERS

My mother was the one who sowed the seeds of birding in me during my school days. She used to show me birds around us, tell their names and some behaviour. Another reason for my interest toward birds was because of my mum’s habit of feeding them by placing water and grains at the backyard. Crows, Mynas and few other species visited and used to feed on grains and sometimes watching those feeding their young made me to think more about it.

Since childhood, I have always had great love for nature. My grandmother’s place is a village near Thamirabarani River (Porunai) and I used to watch the black waterbirds (later I knew them as Cormorants) with delight. As days passed, enjoying the sounds of birds was becoming a habit. On January 12, 2018, my parents bought me a camera and I started photographing birds.

FIRST STEP INTO BIRDING

As I didn’t have proper guidance to birding, finding the names of birds was a task on its own. One day I just simply captured a colourful bird and sent it to one of my college seniors who had immense love for birding. Tamil Selvan told me that it was a Coppersmith Barbet Psilopogon haemacephalus and the bird got its name because of its call which is similar to that of a coppersmith striking a metal with hammer. He further gave me an introduction to birding, taught me bird names, interesting behaviours and suggested some books. I was in awe of the fact that there’s plenty to know about birds and there started my journey into birding. After this, my love for birding grew exponentially as I began to watch more and videographing their beauty. Few weeks later, Tamil Selvan explained me about eBird, an international platform to document and monitor birds. I registered at once and I regularly contribute data and upload images as well.

COBA by AM
Coppersmith Barbet, my gateway to birding. Photograph by Angeline Mano

BUDDING DAYS OF BIRDING

One day from my balcony, I was so thrilled to see a Purple Sunbird Cinnyris asiaticus going near the nest of Scaly-breasted Munia Lonchura punctulata and they became noisy. Mommy Scaly-breasted Munia and Daddy Scaly-breasted Munia were guarding their nest. Later I found that there were juveniles in the nest.

On September 2018, I visited Kannankurichi (Mookaneri) Lake with Tamil Selvan. I saw many species including Little Cormorant Microcarbo niger, White-breasted Waterhen Amaurornis phoenicurus, Little Grebe Tachybaptus ruficollis, Indian Pond Heron Ardeola grayii, Asian Koel Eudynamys scolopaceus, Striated Heron Butorides striata, Tricolored Munia Lonchura malacca. That was a great new experience for me and glad I took my best companion Nikon D3400 to click those birds. Please see the complete checklist here.

TRMU by AM
Tricolored Munia photographed by Angeline Mano at Kannankurichi Lake

FROM DISAPPOINTMENT TO DELIGHT

As I became so passionate in birding, even the small call of birds was so sharp to my ears. One day as I returned home from college, I heard a different call which I hadn’t heard before. So, I took my camera and went searching for the bird but couldn’t find it. I returned disappointed and few minutes later I heard the same call from backyard. This time, I just got a glimpse of its tail. To get a good view, I literally climbed the wall and clicked the bird and referred the book to know its name. It was a Rufous Treepie Dendrocitta vagabunda. That was an awesome and thrilling moment! These days, every time when I just hear the calls, I am unable to ignore it and I start to bird.

RUTR by AM
Rufous Treepie photographed by Angeline Mano

I’m so thankful to my parents and my uncle Shenbaharaman for motivating me in birding. My uncle said that it is better to do birding, enter the field of ornithology and live along with birds and show people their beauty and importance rather than doing other profession. These words penetrated deep into my heart and mind and made me to continue birding with more vigour.

LOVE FOR BIRDING

Birding is a feeling that cannot be expressed in words. When I am birding, I just forget myself and never take my eyes from it. Watching them doing cute things gives a great relaxation and bliss to mind and heart. What I love about birds is—how they behave, because just by observing them we can understand lot of things in life. Birds connect us to nature. In future, I will show people how to conserve the natural world and I really hope that birding and birds will help me to do this.

I also strongly recommend everyone irrespective of their age, to take birding as a hobby and fly with them!

My journey into Birding Read More »

பாம்புத்தாராவும் நானும்

எழுத்து: செந்தில் குமார், தலைமை ஆசிரியர் (மற்றும் பறவை ஆர்வலர்), ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கிருஷ்ணம்புதூர், சேலம்.

சனிக்கிழமை எனக்கு விடுமுறை. என் மகனுக்கு பள்ளி வேலைநாள். காலை எட்டு மணிக்கு அவனை பேருந்து நிலையத்தில் விட்டுவிட்டுக் கிளம்பும் போது, சரி இன்றும் பவளத்தானூர் ஏரிக்குச் செல்லலாமே என்ற உந்துதல் ஏற்பட, வண்டி ஏரியை நோக்கிச் சென்றது.

வற்றாத ஏரியின் ரகசியம்

எங்கள் ஏரியைப் பற்றி சொல்லியேத் தீர வேண்டும். சேலம் தாரமங்கலத்திலிருந்து முக்கால் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. எக்காலத்திலும் அந்த ஏரி வற்றியதாக வரலாறு கிடையாது. பெரிய பெரிய ஏரிகள் வறண்டாலும் எங்கள் ஏரியில் நிச்சயம் கொஞ்சம் நீராவது தேங்கிக்கொண்டு தான் இருக்கும். அதற்கு முக்கியக் காரணம் அங்கு நிலவும் நீர்வளம் அல்ல. தாரமங்கலம் பகுதியின் கழிவுநீர் அனைத்தும் சென்று சேரும் ஒரே இடம் அந்த ஏரி தான். கழிவுநீர் சென்று சேரவில்லை என்றால் பவளத்தானூர் ஏரி எப்பொழுதும் வறண்ட நிலம் தான்.

பாம்புத்தாராவின் தரிசனம்

இருப்பினும் இவ்வளவு அசுத்தமான நீரில் பல வண்ணமயமானப் பறவைகள் வாழ்வது மிகப் பெரிய ஆச்சர்யமே. வழக்கம் போல நாமக்கோழி, முக்குளிப்பான் உள்ளிட்ட பறவைகளே தென்பட்டன. சரி, வீட்டிற்கு கிளம்பலாம் என்று வண்டியைத் திருப்பியப் போது திடீரென்று உள்ளத்தில் ஏற்பட்ட ஒரு உந்துதல் என்னை நிற்கச்செய்தது. ஏரியில் ஏதோ ஒரு வித்தியாசமான உருவம் தெரிகிறதே என்று பார்த்தேன். தொலைவில் இருந்து பார்க்கும் போது ஏரியில் வெட்டப்பட்ட அடிமரத்தின் அடியில் இருந்து ஒரு குச்சி நீட்டிக்கொண்டு இருப்பது போலத் தெரிந்தது. சரி ஒன்றுமில்லை, திரும்பலாம் என்று நினைத்த போது அந்தக் குச்சி இலேசாக அசைந்தது.

796px-Eurasian_Coot_RWD
ஏரியின் நீர்ப்பறவைகளில் ஒன்றான நாமக்கோழி. பட உதவி: விக்கிமீடியா காமன்ஸ்

அருகில் சென்று உன்னிப்பாகப் பார்த்தேன். ஆஹா! அது ஒரு பாம்புத்தாரா (ORIENTAL DARTER Anhinga melangogaster)! என்னே ஒரு அழகானப் பறவை! அன்று முதன்முதலாகப் பார்த்தப் போது ஏற்பட்ட மகிழ்ச்சி அளவிட முடியாதது. நாற்பது அடி தொலைவிலிருந்து தரிசனம் கொடுத்தது சேலம் பறவையியல் கழகத்தின் முத்திரைப் பறவையான எங்கள் பாம்புத்தாரா!

பெயர்க்காரணம் புரிந்தது

அந்தச் சாலையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர். என்னைத் தவிர அதைக் கண்டுகொள்ள ஆளில்லை. தன் இரண்டு இறக்கைகளையும் விரித்துக்கொண்டு “உங்கள் ஊருக்கு வந்திருக்கிறேன். என்னைத் தழுவிக்கொள்” என்று சொல்வது போல நின்றுகொண்டிருந்தது. ஏரிக்கு முதல் வருகை என்பதால் புகைப்படம் எடுத்துக்கொள்ள நண்பர் ராஜ்குமாரை அழைத்தேன். பத்து நிமிடத்தில் வருகிறேன் என்று சொன்னவர் என்ன காரணத்தினாலோ அரை மணி நேரமாகியும் வரவில்லை. “உனக்காக நான் இறகுகளை விரித்துக்கொண்டு அழகாக நிற்கிறேனே, என்னை வரவேற்க ஒரு புகைப்படம் கூட எடுக்க மாட்டாயா?” என நினைத்தது போலும் உடனே நீருக்குள் இறங்கி மறைந்து விட்டது. அது நீந்திச் செல்லும் போது தான் கவனித்தேன். மற்ற பறவைகள் எல்லாம் நீருக்கு மேல் மிதந்து கொண்டு செல்ல பாம்புத்தாராவின் உடல் மட்டும் நீருக்குள் இருக்க அதன் தலை மட்டும் பாம்பு போல் நீட்டிக்கொண்டு சென்றது. அப்போதே அது ஏன் பாம்புத்தாரா என்று அழைக்கப்படுகிறது என்பது புரிந்தது. தொலைவிலிருந்து பார்க்கும் போது நீரில் ஒரு குச்சி நகர்ந்து செல்வது போலத்தான் இருந்தது.  அரை மணி நேரமிருந்தும் ஒரு புகைப்படம் கூட எடுக்கவில்லையே என்ற ஏமாற்றத்துடன் வீட்டிற்குச் சென்றேன்.

Bharatpur Darter by Samyak Kaninde
மீன் வேட்டையில் பாம்புத்தாரா. பட உதவி: சம்யக் கணின்டே

கோபித்துக்கொண்டப் பாம்புத்தாரா 

புகைப்படம் எடுக்காமல் வந்துவிட்டோமே என்ற நினைவே என்னை முழுவதுமாக பாதித்திருந்தது. நண்பரை மீண்டும் அலைபேசியில் தொடர்பு கொள்ளாமல் நேராக ஸ்டுடியோவிற்கே சென்று ஆளை அப்படியே வண்டியில் தூக்கிப் போட்டுக்கொண்டு பத்து மணி அளவில் ஏரிக்குச் சென்றேன். வரும்போதே நம் பாம்புத்தாரா எங்கும் சென்றுவிடக் கூடாது என்று சாமியைக் கும்பிட்டுக்கொண்டே வந்தேன்.

அப்பாடா! இன்னும் என் பாம்புத்தாரா அதே இடத்தில் நின்று கொண்டிருந்தது. நண்பர் பையிலிருந்து கேமிராவை எடுத்து பாம்புத்தாரவை நோக்கி வைத்தார். சிறிய, கரிய குன்றென நின்றிருந்தப் பாம்புத்தாரா, “உங்களுக்காக நான் வெயிட் பண்ண டைம் முடிஞ்சு போச்சு. ஸோ, நான் கெளம்பறேன்” என்று கோபித்துக்கொண்டு பறந்து விட்டது. மீண்டும் ஒரு முறை பெரும் ஏமாற்றமும் வேதனையுமே மிஞ்சியது.

ஒரு வாரத்திற்குப் பின் சிறகிறங்கியது 

நமக்கு கொடுத்து வைத்ததெல்லாம் அவ்வளவு தான் என வீடு திரும்பினேன். பவளத்தானூர் ஏரியைக் கடந்து செல்லும் போதெல்லாம் பாம்புத்தாரா கோபம் தணிந்து மீண்டும் வந்திருக்குமா என்று பார்த்துக்கொண்டே செல்வேன். ஒரு வாரம் கழிந்தது.

அன்று பள்ளி செல்ல காலை 08.30 மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டேன். ஏரியைக் கடக்கும் போது ஆர்வத்துடன் தேடினேன். என்ன ஒரு ஆச்சரியம்! மீண்டும் அதே இடத்தில் சிறகிறங்கி வந்திருந்தது எங்கள் பாம்புத்தாரா! எனக்கோ அளவில்லாத மகிழ்ச்சி! நண்பரை அலைபேசியில் தொடர்புகொள்ள உடனடியாக அவரும் கேமிராவோடு வந்துவிட்டார். அப்புறம் என்ன? ஒரு கிளிக்கோடு நிறுத்துவோமா? பல படங்கள் கிளிக்கியாச்சு!

Pavalathanoor Darter
பவளத்தானூர் ஏரியின் பாம்புத்தாரா. பட உதவி: சுப்ரமணிய சிவா. செ

என் மனதில் இடம் பிடித்த பாம்புத்தாரா இனி எங்கள் வீட்டிலும் இடம் பிடிக்க புகைப்படமாக மாறியது! மீண்டும் சந்திப்போம் என நன்றி சொல்லிவிட்டு நான் பள்ளிக்குச் செல்கையில் அது மீன் வேட்டைக்குச் சென்றுவிட்டது!

பாம்புத்தாராவும் நானும் Read More »